
டேன் பிரியசாத் கொலை வழக்கில், துப்பாக்கிதாரி கைது!!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசத் கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கொழும்பு கருவாத் தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியவில் உள்ள லக்ஸந்த செவன குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.