Crime and Threats Local News

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் – அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித வன்முறைகள் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அதிகாரசபையால் 24 மணிநேர முறைப்பாடுகளை மேற் கொள்ளக்கூடிய வசதிகளை வழங்கியுள்ளது. ஆயினும், முறையான வகையில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட புதிய அரசின் கொள்கைச் சட்டகத்தில் ‘பாதுகாப்பான சிறுவர் உலகம் – ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி’ எனும் கொள்கை ரீதியான கடப்பாட்டின் பிரதான கோட்பாடாக அமைகின்ற பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு விதமாக தலையிடுகின்ற பங்காளர்கள் சிலர் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, மற்றும் இலங்கை பொலிஸ் முக்கிய பணிகளை ஆற்றி வருகின்றது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரிதமாக தலையிட்டு செயற்படுவதற்கு இயலுமாகும் வகையில் கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :

• மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய தேசியமட்டக் குழுவொன்றை நியமித்தல்.

• பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற உடலியல் ரீதியான தண்டனைகளை இல்லாதொழிப்பதற்கு இயலுமாகும் வகையில் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் வழக்குக் கோவையை துரிதமாக திருத்தம் செய்தல்.

• பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் பற்றி அறிக்கையிடும் போது பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாவதைத் தடுப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உட்சேர்த்து, தற்போது வரைவாக்கம் செய்யப்படுகின்ற ஊடக ஒழுக்கநெறிக் கோவையை துரிதமாக வெளியிடல்.

• பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தனித்துவ அடையாளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக செய்தித் தொடர்பாடலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை ஒழுங்குமுறைப் படுத்துவதற்காக குற்றத்தால் பலியானவர்கள் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உடனடி தலையீடுகளைப் பெற்றுக் கொள்ளல்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *