அம்பாறை – மஹியங்கனை வீதியில், மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பேருந்து கணிசமாக சேதமடைந்த போதிலும், பயணிகள் எவருக்கும் பாரிய காயங்கள்
ஏற்படவில்லை என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave feedback about this