பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது.
பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என இந்திய ராணுவம் பெயர் வைத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 25 பெண்களின் கணவர்கள் கொல்லப்பட்டனர். கணவர்களை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கணவர்களை இழந்து சிந்தூர் என இந்தியில் அழைக்கப்படும் சிவப்பு பொட்டை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.