அன்பிற்குரிய பெற்றோர்களே..!
இன்று பரீட்சை முடிந்து உங்கள் பிள்ளை வீடு வரும் போது…..
▫️வீட்டை அமைதியாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வோம்.
▫️எங்கள் முகத்தில் இனிமையான சிரிப்பை மலர விடுவோம்.
▫️மனம் திறந்து, கைகள் விரித்து, தலைதடவி வரவேற்போம்.
▫️உன் தளராத முயற்சியை பாராட்டுவதாக எடுத்துச் சொல்வோம்.
▫️அவர்களுக்கு பிடித்த ஏதாவது உணவை தயார்படுத்துவோம்.
▫️உன் கடின உழைப்புக்கு எனது நன்றி என்று முடிந்த ஏதாவது ஒன்றை கொடுக்கலாம். அது ஒரு வரவேற்பு அட்டையாகக்கூட இருக்கலாம்.
▫️பிள்ளை பரீட்சை பற்றி ஏதேனும் பேசினால், கவனமாக கேட்போம். பிள்ளை பேசிமுடிந்ததும், மதிப்பெண்களைவிட உன் முயற்சியில் பெருமையாக இருக்கிறேன் என்று தைரியமாக சொல்வோம்.
நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். என் அன்பு என்றும் இருக்கிறது, என்பதை உணர்த்தும் இந்த வரவேற்பு பிள்ளை மனதில் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.
Leave feedback about this