இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த மதிப்பாய்வை முன்னிட்டு, IMF மற்றும் இலங்கை அதிகாரிகள் ஊழியர்கள் மட்டத்தில் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னேறி வருவதை வெளிப்படுத்துகிறது.IMF நிர்வாக சபை இந்த மதிப்பாய்வை அங்கீகரித்தவுடன், இலங்கைக்கு சுமார் 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியுதவி, நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் வலுப்பெறவும், நிதி ஒழுங்கை நிலைநிறுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave feedback about this