Crime and Threats Local News

இலங்கையில் அதிகரித்த சைபர் குற்றங்கள் – சிக்கிய 12,000 பேர்

இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 12,650 க்கும் அதிகமான சைபர் குற்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

அவற்றில் சமூக ஊடக மோசடிகளான போலி கணக்குகள் (Fake IDs), கணக்குகளை முடக்குதல் (Hacking) மற்றும் இணைய நிதி மோசடிகளே அதிகளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ள முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் புதிதாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களையே குற்றவாளிகள் அதிகம் குறிவைக்கின்றனர்.

இதன்மூலம், இணையவழி துன்புறுத்தல்கள், பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் தனிநபர்களின் நற்பெயருக்கும் மனநலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில், பொதுமக்கள் தமது டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

01. வலுவான கடவுச்சொற்களைப் (Passwords) பயன்படுத்துதல்.

02. கணக்குகளுக்கு Two-factor authentication முறையைச் செயற்படுத்துதல்.

03. அறிமுகமில்லாத இணைப்புகளை (Links) அழுத்துவதைத் தவிர்த்தல்.

மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள அல்லது ஆலோசனைகளைப் பெற SLCERT நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video