Education Local News

இலங்கை கல்வி நிர்வாகம் சேவை தரம்- 11 இற்கு பதுளை மாவட்டத்தில் இருந்து நால்வர் தெரிவு

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்-11மட்டுப்படுத்தப்பட்டப் போட்டிப் பரீட்சையின் நேர்முகத் தேர்வின் பின்னரான பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் பதுளை மாவட்டத்தில் இருந்து குறித்த சேவைக்கு நால்வர் தெரிவாகியுள்ளனர்.

இவர்களில் பதுளை கல்வி வலயத்தின் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஆசிரியை திருமதி. ராமசந்திரன் சுகந்தினி தமிழ்மொழி பாடத்திற்கும், உடுவரை கீழ் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் மாதவராம் ஸ்ரீதரன் உடற்கல்வி பாடத்திற்கும், வெளிமடை கல்வி வலயத்தின் கம்பஹா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் முத்தையா புவனகுமார் இந்துசமய பாடத்திற்கும், பண்டாரவளை கல்வி வலயத்தின் கொஸ்லாந்தை ஸ்ரீ கணேஷா தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் காந்தி தினேஷ்குமார் கணிதப் பாடத்திற்கும் தெரிவாகியுள்ளதுடன் , இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 8 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 3 பேரும், கேகாகலை மாவட்டத்திலிருந்து 2 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 3 பேரும் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஒருவரும் என மொத்தமாக 21 பேர் தெரிவாகியுள்ளனர்.

பாட ரீதியாக பொது ஆளணி-01, கணிதம்-01, விஞ்ஞானம்- 01 தமிழ்மொழி- 07, ஆரம்பகல்வி- 03, ஆங்கிலம்-01, இந்துசமயம்-03, உடற்கல்வி-01, அழகியற்கல்வி-01, வரலாறு-02 என இத் தெரிவுகள் இடம்பெற்றுள்ளதுடன் மலையக கல்வித் துறையில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிப் போக்கினையும் இத் தெரிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video