ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய (23) போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியின் போது இலங்கை அணியில் முக்கிய மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படும் என அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் இன்னும் பதினொருவர் கொண்ட அணியை உறுதி செய்யவில்லை. தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றோம். ஆனால் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது நிறைய இடது கை வீரர்கள் உள்ளனர். எனவே ஒரு சுழற்பந்து வீச்சாளரில் நிச்சயமாக மாற்றம் இருக்கலாம். அத்துடன் நாங்கள் இன்னும் ஒரு மேலதிக பந்துவீச்சு சகலதுறை வீரரை இணைப்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம். சில நேரங்களில் நாங்கள் நான்கு பந்துவீச்சாளர்களுடன் சென்று நிலைமையை சமாளிப்பதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. அதனால் ஒரு மேலதிக பந்துவீச்சு சகலதுறை வீரர் இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அத்துடன் தொடர்ச்சியாக 4 இடது கை வீரர்கள் இருப்பது ஏனைய அணியினருக்கும் சாதகத்தை ஏற்படுத்தும் ” என இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
Leave feedback about this