Education Local News Service

இலவச சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் – பதுளை கிரிக்கெட் மைதானத்தில், KNOW YOUR NEETHI!!!

சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், உங்கள் நீதியை அறிந்து கொள்வதற்கு உங்களூக்கான சிறந்த வாய்ப்பு முற்றிலும் இலவசமாக பதுளை மாநகரீல் நடைபெற இருக்கின்றது.

நமது உரிமைகளை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில், காலை எட்டு மணி முதல் பதுளை கிரிக்கெட் மைதானத்தில் இலவச முகாம்.

பங்கேற்பாளர்களின் மேடை நாடகங்கள், வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் மூலம் சட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்!

உங்கள் சட்டப் பிரச்சினைகள் குறித்து அரசு நிறுவனங்களிடமிருந்து வழிகாட்டுதலையும் பெறலாம் அத்துடன் காணி, தொழிலாளர் பிரச்சினைகள், மொழி மற்றும் மனித உரிமைகள், சைபர் குற்றம், குடும்பம் மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்ட பிரச்சினைகள் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்து இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை பெறலாம்.

இந்நிகழ்வில் விசேட அம்சமாக இயலாமை கொண்டுள்ள நபர்களுக்கு உதவிகளை பெறுவற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

நமக்கான சட்டத்தை அறிந்துகொண்டு நமது உரிமைகளை பாதுகாப்போம்!

இது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்புடன் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்துடன் இணைந்து நீதி அமைச்சின் அனுமதியுடன் செயல்படுத்தப்படும் நீதித்துறைக்கான அனுசரணை திட்டம் (JURE).

KNOW YOUR NEETHI!

சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாமில் பங்காளராக ஊவாசக்தி நிறுவனம் செயற்படுகின்றது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video