இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் உலக மனநல தினம் ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
மனநலத்தைப் பாதுகாப்பதும், அதனைச் சார்ந்த விழிப்புணர்வை பரப்புவதும் இந்நாளின் முக்கிய நோக்கங்களாகும்.
1992 ஆம் ஆண்டு உலக மனநல கூட்டமைப்பினால் (World Federation for Mental Health) ஆரம்பிக்கப்பட்ட இந்த நாள், பின்னர் உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆதரவுடன் சர்வதேசளவில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டுக்கான உலக மனநல தினத்தின் கருப்பொருள் –“கடுமையான சூழ்நிலைகளில் மனநலம் – சேவைகளுக்கு அணுகல்” (Mental Health in Humanitarian Emergencies: Access to Services) என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருப்பொருளின் நோக்கம், இயற்கை பேரழிவுகள், போர்கள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற மனிதாபிமான அவசரநிலைகளில் வாழும் மக்களுக்கு மனநல ஆதரவுகளை எளிதில் கிடைக்கச் செய்வதற்கான தேவையை வலியுறுத்துவதாகும்.
மனநலம் என்பது உடல்நலத்துடன் இணைந்த முழுமையான ஆரோக்கியத்தின் முக்கிய அங்கமாகும்.
“மனநலமின்றி ஆரோக்கியம் இல்லை” எனும் செய்தியை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. மனஅழுத்தம், பதட்டம், தனிமை போன்ற பிரச்சினைகளில் சிக்கியவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சமூக ஆதரவு மிக முக்கியம்.
நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது நிபுணர்களுடன் உரையாடுவது மனநலத்தை மேம்படுத்தும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனையொட்டி, உலக நாடுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் சமூக ஊடக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
இந்நாள் மூலம், “நம்முடைய மனநலமும் மற்றொருவரின் நலனும் ஒன்றோடொன்று தொடர்புடையது” என்ற உண்மையை நினைவூட்டுவதே முக்கிய நோக்கமாகும்.


Leave feedback about this