Local News Politics

ஐ.தே.கட்சி – ஐ.ம.சக்தி, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணக்கப்பாடு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கிய உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக இன்று (19) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த விடயத்தை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *