Sports

ஐ. பி. எல். இறுதிப் போட்டி இன்று

ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.

முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை வசப்படுத்தி இருக்கின்றன.

மேலும், இவ்விரு அணிகளும் 18ஆவது முறையாக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து களம் கண்டுள்ளன. ஆனால் இதுவரை கிண்ணத்தை முத்தமிடாத அணிகளாகவே இரு அணிகளும் உள்ளன.

அந்த வகையில் இன்றைய இறுதிப்போட்டியில் வெல்ல போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பில் இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video