கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்காக பாதீட்டுக்கு முந்தைய விவாதம் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக நாட்டின் பாடசாலை முறையை நெறிப்படுத்துதல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் விரும்பிய இலக்குகளை அடைவதற்கு தேவையான முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள தொழிற்கல்வித் திட்டங்களுக்குப் பதிலாக, கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவின் தலையீட்டின் மூலம் தேசிய தொழிற்கல்வித் திட்டத்தைத் தயாரிக்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Leave feedback about this