Crime and Threats Local News

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும் மகளும் சடலத்தை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்படி, களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

கடற்கரையில் குப்புற விழுந்து தலை மண்ணிற்குள் மூடிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் கருப்பு நிற நீண்ட கால்சட்டை, பெல்ட் மற்றும் வெள்ளை டி-செட் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video