கொழும்பு கொட்டாஞ்சேனை சிறுமி உயிர் மாய்த்துக் கொண்ட வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை கொழும்பு மேலதிக நீதவான், சம்பத் ஜயவர்த்தன முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது குறித்து சிறுமியின் தாயாரும் அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் தலைவரும் சாட்சியமளித்திருந்தனர்.
இதன்படி மேலதிக நீதவான் முன்னிலையில் தமது சாட்சியங்களை வழங்கிய குறித்த அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் தலைவர், சிறுமி உயிர் மாய்த்துக் கொள்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நண்பர் ஒருவரிடம் கதைப்பதற்காக தொலைபேசி ஒன்றை கோறரினார் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சாட்சியமளித்த குறித்த அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் தலைவர் ‘கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி அளவில் நீர் இறைக்கும் இயந்திரத்தை தான் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
“அந்த நேரத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது அது ஒரு வாகனம் போல சத்தம் கேட்டது நான் சென்று பார்த்த போது அங்கே ஒரு சிறுமி கிடைப்பதை கண்டேன்”.
‘சிறுமி விழுந்து விட்டதை அறிந்ததும் குழந்தையின் பெற்றோர் வந்தனர். அவர்கள் வந்து முச்சக்கர வண்டியில் சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.”
“குறித்த சிறுமி உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது எனக்கு தெரியாது. சிறுமி மேல் மாடியிலிருந்து குதிப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு நான் சம்பவ இடத்திற்கு சென்றேன்”.
“அங்கு ஒரு ஜோடி காலணிகளையும் ஒரு இளஞ்சிவப்பு நிற பையையும் பார்த்தேன். அத்துடன் அங்கு சிறிய மேசை ஒன்றையும் பார்த்தேன். அந்த மேசை நான் ஏற்கனவே அங்கே பார்த்திருக்கின்றேன்”. என்று கொட்டாஞ்சேனை சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் தலைவர் சாட்சியமளித்துள்ளார்.
தொடர்ந்து சாட்சியமளித்த அவர் ‘அந்த சிறுமி முன்னதாகவே மாடிக்கச் சென்று இரவு 7.30 வரை மேசையில் அமர்ந்திருப்பதை அங்குள்ள ஊழியர் அவதானித்துள்ளார்’என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி இறப்பதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு 10 மணி அளவில் வீட்டின் முன் பகுதியில் இருந்து அம்மா “கதவை திற, அம்மா கதவை திற” என்று கத்திக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டதாக அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் பாதுகாப்பு அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் அதன் தலைவர் கூறியுள்ளார்.
சிறுமி உயிர் இழப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நண்பருடன் கதைப்பதற்காக அங்குள்ள ஒருவரிடம் தொலைபேசியை கோரியதாகவும் ஆனால் அங்கிருந்து பாதுகாப்பு ப் பணியாளர் அதை அவருக்கு கொடுக்க விடாமல் தடுத்ததாகவும் பின்னர் தான் அறிந்ததாக குறித்த அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் தலைவர் கூறியுள்ளார்.