Crime and Threats Local News Uncategorized

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை விவகாரம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சமீபத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *