Local News Politics

கொழும்பு மாநகர சபைக்கான மோதல் தீவிரம்- கைப்பற்றப் போவது யார்….!

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவதில் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.

329 மன்றங்களுக்கான தேர்தலில் பல மன்றங்களில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெறாத நிலையில் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மிகவும் பெரிய மாநகர சபையான கொழும்பின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவார்கள் என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும், கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளுக்கு அமைய எதிர்க்கட்சிகள் அதிக ஆசனத்தை பெற்றுள்ளன.

இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவுடன் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என சூளுரைத்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை எந்தவொரு தரப்புக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஆதரவு பெறுவதற்காக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் அதிக உறுப்பினர்களைப் பெற்ற குழுவாக தேசிய மக்கள் சக்தி உள்ளது.

அந்தக் குழுவுக்கு இணையாக வேறு குழு இல்லையே. ஏதேனும் குறை இருந்தால், உறுப்பினர்களாக சிலருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *