Sports

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறும் விராட் கோஹ்லி!!

இந்திய வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் கோஹ்லியிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

“அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கியமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரவிருப்பதால், தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இருப்பினும், கோலி இன்னும் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை” என்று பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பணியாற்றிய ரோஹித் சர்மா, சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இந்தியாவுக்காக 210 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோஹ்லி, தற்போது 9,230 ரன்கள் குவித்துள்ளார்.ஒரு இன்னிங்ஸுக்கு சராசரியாக 46.85 ரன்கள் எடுக்கும் கோலி, 30 சதங்களையும் 31 அரைசதங்களையும் குவித்துள்ளார்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video