Local News

ஜப்பான் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செப்டம்பர் 22 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர், ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செப்டம்பர் 27 ஆம் திகதி காலை ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சென்றிருந்தனர்.

அதன்படி, விஜயத்தை முடித்துக்கொண்டு, அவர்கள் அனைவரும் இன்று காலை 09.30 மணிக்கு தாய்லாந்தின் பொங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-403 விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video