Crime and Threats Local News

டிரான் அலஸ், தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா கோரினராம்!

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா பணம் கோரியதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன் சிந்தக அல்லது ‘ஹரக் கட்டா’ குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு பணத்தினைக் கொடுக்காத காரணத்தினால்,ரூபா 10 மீலாலியன் செலவிட்டு தன்னை தடுத்து வைத்திருப்பதாகவும் ஹரக் கட்டா குறிப்பிட்டார்.

தங்காலையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு மாதத்திற்கு 10 மில்லியன் ரூபா செலவாகும் என்றும் ஹரக் கட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியில் சொல்ல வேண்டிய பல விடயங்கள் இன்னும் உள்ளன. அவற்றை எல்லாம் விரைவில் நான் வெளிப்படுத்துவேன் என்றும் ஹரக் கட்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை விடுவிப்பதற்கு பேரம் பேசப்பட்டிருக்கலாம் என்றும் அது தொடர்பிலேயே ஹரக் கட்டா இன்று இவ்வாறு கருத்தினை வெளியிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *