இணையத்தின் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் உருவாக்கப்பட்ட குழுக்களின் மூலம் பல்வேறு நிதி மோசடிகள் தினந்தோறும் இடம்பெற்று வருவதாகவும், இதற்கான பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, “உயர் வருமானம் பெறலாம்”, “வீட்டிலிருந்தபடியே வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம்” போன்ற விளம்பரங்களின் மூலம் மக்களை ஏமாற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் குழுக்களின் வலையில் சிக்க வேண்டாம் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், தனிப்பட்ட வங்கி கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் மற்றும் இரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Leave feedback about this