Local News

திருமதி உலக அழகிப் போட்டி: சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்!

திருமதி உலக அழகிப் போட்டி: சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்!அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த அழகிப் போட்டியானது, உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகளின் பங்கேற்புடன் நாளை (22) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ளது.

சபீனா யூசுப்பை வழியனுப்பி வைப்பதற்கும் வாழ்த்துத் தெரிவிப்பதற்கும், நிகழ்ச்சியின் தேசியப் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க, தேசியப் பயிற்றுவிப்பாளர் ருக்மால் சேனாநாயக்க, மொழி மற்றும் ஆளுமைப் பயிற்றுவிப்பாளர் தாரக குருகந்த மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திருமணமான அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இஷாதி அமந்தா உள்ளிட்ட சபீனாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெருமளவிலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video