Local News

தொடர்ச்சியான விக்கெட் சரிவை ஏற்றுக்கொள்ள முடியாது – சரித்

ஹொங்கொங் அணியுடனான ஆசிய கிண்ணத் தொடரின் நேற்றைய (15) போட்டியில் தொடர்ச்சியாக தமது அணி விக்கெட்டுக்களை பறிகொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்தார்.

போட்டியின் பின்னர் கருத்து வௌியிடும் போதே, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

16 ஓவரில் தமது விக்கெட் உட்பட அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. குறுகிய வடிவ போட்டிகளில் அவ்வாறு விக்கெட் வீழ்த்தப்படுவது சாதாரணமானதுதான்.

எனினும், இது தொடர்ச்சியாக நடைபெறக்கூடாது. எனவே அது தொடர்பில் பகுப்பாய்வு செய்து வருகின்றோம். எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிந்து துடுப்பாட்ட வரிசையை சரி செய்ய வேண்டும்.

அத்துடன் முதல் 3 ஓவர்களிலும் நாங்கள் மோசமாக பந்துவீசியிருந்தோம். இவ்வாறு விளையாட நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. போட்டியில் வெற்றிக்கு பங்காற்றியவர்களுக்கே இந்த பாராட்டுகள் சென்றடையும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video