Local News

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தில் இணைய விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் பல இணைய மோசடி சம்பவங்கள் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றத்திற்கு கிடைத்துள்ளதாக மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில், குறிப்பாக தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில், தள்ளுபடிகள், பரிசுகள் அல்லது சிறப்பு விளம்பரங்களாக போலி விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் ஒன்லைனில் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
போலி விளம்பரங்கள்
பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களையும் முக்கியமான தரவையும் திருட இது போன்ற இணைப்புகள் மூலம் போலி வலைத்தளங்களுக்கு வழிநடத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.www.radioraaga.lk

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video