கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் ஹெட்டிகம பகுதியைச் சேர்ந்த 80 வயதான முதியவர் கிம்புல்வா ஓய மண்டலபல பாலம் அருகே நீரில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பல்லேகலே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் 63 வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர் பார்பர் வத்தை, குன்னேபான பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரு சடலங்களும் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவங்களைச் சுற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Leave feedback about this