நுவரெலியா குறுக்கு வீதியில் லொறி ஒன்று இன்று (28) ம் திகதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்றுள்ளது.வவுனியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியில் குழாய் கிணறு தோன்றும் பணியில் ஈடுபடுவதற்காக வந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
இந்த விபத்து லொறியின் தடை செயலிழந்தமையினால் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்து ஏற்படும் போது ஐந்து போர் லொறியில் இருந்துள்ளதாகவும் அதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பெற்று வெயியேறியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.குறித்த விகத்தில் லொறிக்கு பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Leave feedback about this