Local News Politics

நுவரெலியா மாவட்ட காணி கொள்ளை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டார் – அமைச்சர் மஞ்சுள சுரவீர

நுவரெலியா மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்திய அரசியல் வாதிகளின் பெயர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர நாடாளுமன்றத்தில் இன்று (23) வெளியிட்டார்.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு காணி இல்லாத நிலையிலேயே இவ்வாறு காணி கொள்ளை இடம்பெற்றுள்ளது எனவும் அவர்க குறிப்பிட்டார். கீழ் வரும் நபர்களின் பெயர்களையும் அவர்க வெளியிட்டார்.

1. முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல ் சுரேஷ்: அம்பகமுவ, வேவல்கலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர்

2. உபாலி லியனகே (தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர்) வேவல்கலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர்.

3. சுப்பையா சதாசிவம் (முன்னாள் பா.உ) கொத்மலை கிழக்கு, புரட்டொப் பிரதேசத்தில் சுமார் 16 ஏக்கர்.

4. ரஞ்சித் சியம்பலாபிட்டிய (முன்னாள் இராஜாங்க அமைச்சர்) தலவாக்கலையில சுமார் 50 ஏக்கர்.

5. மகிந்தானந்த அளுத்கமகே (முன்னாள் அமைச்சர்) நுவரெலியா மாகஸ்தொட்ட, ஹாவெலிய, லவ்வர்ஸ்லீப் ஆகிய பிரதேசங்களில் மொத்தமாக 30 ஏக்கர்.

எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் பட்டியலை வெளியிட்டார்.இந்த பெயர் பட்டியல் எங்கே எனவும் காணி பிரதி அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பினார். இது பற்றி ஆராயப்படும் என பிரதி அமைச்சர் பதிலளித்தார்.

இந்த காணி கொள்ளை தொடர்பில் எப்போது விசாரணை ஆரம்பமாகும் என்ற கேள்விக்கு, இது தொடர்பில் வெளிப்படையான விசாரணையை‌ முன்னெடுத்து, விரைவில் சபைக்கு தெரியப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video