Local News Trending விபத்துகள்

பதுளை பேருந்து விபத்து குறித்து வைத்தியர் பாலித விளக்கம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நான்காவது மைல்கல் பகுதியில் இன்று (21) மாலை பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளார்.

இந்த இடத்தில் பல விபத்துகள் நடந்துள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இதே இடத்தில் இதற்கு முன்பு விபத்துக்குள்ளானதாகவும் வைத்தியர் கூறினார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சிறு குழந்தை என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video