சிறுவர்கள் பாதுகாப்பாக சாட்சியம் வழங்குவதற்கான சாட்சிய அறைகளை நிறுவுவது, நாட்டின் நீதித்துறை அமைப்பில் ஒரு திருப்புமுனையாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பாக சாட்சியம் வழங்கக்கூடிய டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய சாட்சிய அறையை கண்டி மேல் நீதிமன்றத்தில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பாதிக்கப்பட்டவர்களாக, சட்டத்தின் முன்வரும் சிறுவர்கள் இனி பாதுகாப்பாக சாட்சியம் வழங்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்த வசதிகளின் ஊடாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள், நீதிமன்ற வளாகத்தில் தனியொரு அறையிலிருந்து சாட்சியமளிக்க முடியும்.
அத்துடன், சிறுவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அச்சம் மற்றும் அதிர்ச்சியையும் குறைக்க முடியும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Leave feedback about this