Local News Politics

பிள்ளையானின் நெருக்கமான சகா ஒருவர், அவரின் சுயவிருப்பின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானின் நெருக்கமான சகா ஒருவர், அவரின் சுயவிருப்பின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர் , தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால , கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான அழவில்லை என்றும் அந்த சந்திப்பின்போது அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தான் இதனை வினவியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையை குழப்பும் வகையில் கம்மன்பில செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்ச ஆனந்த , பிள்ளையானுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் விசாரணைக்கு சுயமாகவே வருகிறார் என்றால் அவர்கள் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *