புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான தொடக்க விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இதற்காக எதிர்பார்க்கப்படும் செலவு 424 மில்லியன் ரூபாய் ஆகும்.
குறித்த புனரமைப்பின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறுவப்படவுள்ளன.
Leave feedback about this