YouTube கூட்டாளர் திட்டத்தின் (YPP) கீழ் அதன் வருவாய் விதிகளில் மாற்றங்களை YouTube அறிவித்துள்ளது.
ஜூலை 15 முதல் இந்த நடைமுறை தொடங்கும்.அங்கு மீண்டும் மீண்டும் வரும், நகலெடுக்கப்பட்ட வீடியோக்கள் அல்லது பெருமளவில் பலராலும் இடப்பட்ட வீடியோக்களை பதிவேற்றும் படைப்பாளிகள் வருவாய் ஈட்டத் தகுதி பெற மாட்டார்கள்.
பழமையான மற்றும் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான YouTube, அசல் அல்லாத மற்றும் மீண்டும் மீண்டும் வரும் பதிவேற்றப்படும் பதிவுகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது YouTube கூட்டாளர் திட்டத்திற்கான (YPP) அதன் நவீன புதுப்பிப்பின் ஒரு பகுதியாகும், மேலும் YouTube படைப்பாளர்களுக்கான புதிய கொள்கை ஜூலை 15, 2025 முதல் அமுலுக்கு வரும்.

Leave feedback about this