உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் உரிய உள்ளூராட்சி நிறுவனத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.


Leave feedback about this