வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று (06) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவி அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave feedback about this