வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18) மாலை நீராட சென்றுள்ளனர். இதன்போது குறித்த மாணவர்கள் குளத்தில் நீராடிய போது அதில் ஒரு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Leave feedback about this