Local News

வெள்ள நீர் கால்வாயில் சிற்றூந்து வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது.

காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் வெள்ள நீர் நிரம்பிய பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video