யேமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவூதி அரசாங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாக யேமனின் ஹவூதி தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
காசா மோதலுடன் தொடர்புடைய பதற்றங்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஹவூதி இராணுவ தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சனாவில் அண்மையில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 90 க்கும் மேற்பட்டவர்களைக் காயமடைந்தனர்
யெமன் அரசாங்கத்தின் வருடாந்த செயல்திறனைப் பற்றி விவாதிக்கவும் மதிப்பிடவும் கூட்டப்பட்ட நிகழ்வொன்றின் போதே இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave feedback about this