ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் ஹொங்கொங் அணிக்கு 189 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave feedback about this