Local News

16 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வு இன்று – ஜனாதிபதி தலைமையில்..!

யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (19) இடம்பெறவுள்ளது.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக முப்படைகளையும் வழி நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்வு பத்தரமுல்லை இராணுவ நினைவு தூபி வளாகத்திற்கு முன்பாக இன்று (19) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த போக்குவரத்து திட்டம் கீழ்வருமாறு, எந்தவொரு வீதியும் மூடப்படாது. நிகழ்வு நடைபெறும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், பொல்துவ சந்தியிலிருந்து ஜெயந்திபுர வழியாக கியன்யேம் சந்தி வரை பாராளுமன்ற வீதியில் கொழும்பிலிருந்து நுழையும் மற்றும் கொழும்புக்கு வௌியேறுவதற்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

மாற்று வழிகள் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள், பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்ல சந்திக்குச் சென்று, பின்னர் பாலம் துன சந்தியிலிருந்து கியன்யேம் சந்திக்குச் செல்ல வேண்டும்​.

கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியயேம் சந்தியிலிருந்து பாலம் துன சந்தி வழியாக பத்தரமுல்ல சந்திக்கு பயணித்து, பின்னர் பொல்துவ சந்தி வழியாக கொழும்புக்குச் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *