World News

26 இலட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நேற்று நடத்தியது.

இதன்போது சரயு ஆற்றின் கரையில் 26,17,215 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றினர்.

உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video