Weather

May 29/வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

www.radioraaga.lk News

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை எச்சரித்துள்ளது.www.radioraaga.lk News

மழையுடன் கூடிய வானிலை 

இதேவேளை, இன்று (29) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை  மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.www.radioraaga.lk News

காற்று

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். 

நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

www.radioraaga.lk

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video