இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானமொன்றை எடுத்துள்ளது
மீண்டும் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் போட்டிகள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்அதாவது, வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது..
ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் முடியும் வரை தற்காலிக மாற்று வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.அதேசமயம் இத்தொடர் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் தேர்வுசெய்யப்பட்ட லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், நந்த்ரே பர்கர், மயங்க் அகர்வால் மற்றும் செதிகுல்லா அடல் ஆகியோரை அணிகள் அடுத்த சீசனுக்கு தக்க வைக்க முடியும் என்பதையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெளிவுபடுத்தியுள்ளது.முன்னதாக இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஃபிரேசர் மெக்குர்க் தொடரிலிருந்து விலகியதை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.