Local News Politics

இலங்கையின் 53வது குடியரசு தினம் இன்று!

இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 வருடங்கள் நிறைவடைகிறது.

1815 ஆம் ஆண்டு, கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன் இணைக்கப்பட்டது, அன்றிலிருந்து, நாட்டின் மீதான இறையாண்மை பிரித்தானிய பேரரசிடம் மாற்றப்பட்டது.

பிரித்தானிய மன்னரால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் நாடு ஆளப்பட்டது. இந்நிலையில், 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியே இலங்கை சோல்பரி யாப்பு முறையில் இருந்து விடுபட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.

1972ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் இருந்த ஶ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்தில் இருந்து நீக்கி சுதந்திர குடியரசாக மே மாதம் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.

அதற்கமைய, பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கை முழு சுதந்திரம் பெற்ற நாள் குடியரசு தினம் என்பதோடு, இது நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *