தங்காலை பொலிஸ் பிரிவின் கொழும்பு-வெல்லவாய வீதியில் இன்று (24) காலை மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் பயணித்த பாரவூர்தியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பஸ்ஸிலிருந்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும், தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.சடலம் தங்காலை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.