Local News Politics

பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய NPP!

நகர்ப்புற மற்றும் வடகிழக்கு தளங்களில் தோல்வியடைந்த போதிலும் தேசிய மக்கள் கட்சிக்கு வலுவான மக்கள் ஆதரவு.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைவாக, 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. எவ்வாறாயினும், அக்கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை 126 சபைகளில் மாத்திரமே கிடைத்துள்ளது.

ஏனைய சபைகளில் ஆட்சியமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் உதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தேசிய மக்கள் சக்தி காணப்படுகிறது.

அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயாதீன கட்சிகளிடமும் ஏனைய சபைகளுக்கான ஆட்சி அதிகாரம் பிரிந்துச் சென்றுள்ளது.

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட உறுப்பினர்களை விடவும் அதிகளவான உறுப்பினர்களை எதிர்க்கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *