பேருந்தொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தகவலின்படி, பிலாஸ்பூர் மாவட்டத்திலிருந்து குமார்விற்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் சுமார் 30 முதல் 35 பேர் வரை பயணித்துள்ளனர்.
அந்த நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது.
மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதுவரை மூவர் உயிருடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மண்ணுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave feedback about this