Local News

இன்றிரவு 11 மணி வரை 09 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (12) இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல்,வடமேல், சபரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 09 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 05 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கப் பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video