World வணிகம்

இலங்கையின் தேயிலை இறக்குமதியை மேம்படுத்த ஈரான் தயார்

மத்திய கிழக்கு நெருக்கடியை தொடர்ந்து இலங்கையுடனான வர்த்தக உறவுகளை, விசேடமாக தேயிலை இறக்குமதியை மேம்படுத்த தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான 12 நாள் மோதலுக்குப் பின்னர், ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் இதனை குறிப்பிட்டுள்ளார். மோதலின் போது தற்காலிக இடையூறுகள் இருந்த போதிலும், வர்த்தக பாதைகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

போரைக் காட்டிலும் ராஜதந்திரத்தையே ஈரான் விரும்புவதாக அவர் வலியுறுத்தியுள்ளார். மோதலை அதிகரித்ததற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய அவர், இலங்கையின் நடுநிலை மற்றும் சமநிலையான நிலைப்பாட்டுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்காவிற்கு எதிராக முறையான முறைப்பாடளிக்க ஈரான் தயாராகி வருகிறது என, இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video