Local News Politics

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம்

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

அதன்படி, கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்து, இரு நாட்டு உறவுக்கு விரோதமானது எனவும் இந்த விடயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளாா்.

அனுரகுமார திசாநாயக்கவின் இந்தப் பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலு சோ்க்காது.

இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அவரது பேச்சு அமைந்துள்ளது.

கச்சத்தீவு மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக கடற்றொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு கருத்திற்கொள்ள வேண்டும்.தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமையை நிலைநாட்டவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளாா்.

இதேவேளை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்​முரு​கனும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கச்​சத்​தீவு விவ​காரத்​தில் இலங்கை ஜனாதிபதியின் திமிர்ப்​பேச்சு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமைக்​கும், மத்​திய அரசுக்கும், தமிழக அரசுக்​கும் நேரடி​யாகச் சவால்​விடும் அகந்தை மிகுந்​தப் பேச்​சாகும்.

கச்​சத்​தீவு தமிழர்​களின் உரிமை நிலம். இலங்கை ஜனாதிபதியின் பேச்​சுக்கு மத்​திய அரசும், அமைச்​சர்​களும் மௌனம் சாதிப்​பது வரலாற்​றின் பெரும் துரோகம்.

எனவே, கச்​சத் தீவை மீட்​டெடுக்க சட்ட, அரசி​யல் நடவடிக்​கைகளை மத்​திய, மாநில அரசுகள் உடனடி​யாக தொடங்க வேண்​டும். இல்லாவிட்டால் மக்​களைத் திரட்​டி போ​ராட்​டங்​கள்​ நடத்​துவோம்”​ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video